search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ மோதல்"

    மோட்டார் சைக்கிள் மோதியதால் தடுமாறி விழுந்த என்ஜினீயர் மீது ஆட்டோ மோதியதில் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை வீதியை சேர்ந்தவர் வீரய்யன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதை. இவர்களது ஒரே மகன் விவேக் அசோக் பிரசாத் (வயது 27). இவர், எம்டெக் (என்ஜினீயரிங்) படித்து முடித்து வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் விவேக் அசோக்பிரசாத் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    புதுவை சுப்பையா சாலை ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விவேக் அசோக் பிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில், நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த விவேக் அசோக் பிரசாத் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவேக் அசோக் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சஜீத் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் தண்ணீர் லாரியும், பயணிகள் ஆட்டோவும் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #Accident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள கியோரய் தண்டா கிராமத்தில் பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    முன்னால் சென்ற வாகனத்தை ஆட்டோ முந்த முயன்றது. அப்போது கட்ட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரில் வந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    ×